ABOUT BOOK DAY & NEED

World Book Day

World Book Day or World Book and Copyright Day (also known as International Day of the Book or World Book Days) is a yearly event on 23 April, organized by UNESCO to promote reading, publishing and copyright. In the United Kingdom, the day is instead recognized on the first Thursday in March.
World Book Day was celebrated for the first time on 23 April 1995.The connection between 23 April and books was first made in 1923 by booksellers in Spain as a way to honour the author Miguel de Cervantes who died on that day.
In 1995, UNESCO decided that the World Book and Copyright Day would be celebrated on this date because of the Catalonian festival and because the date is also the anniversary of the birth and death of William Shakespeare, the death of Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega and Josep Pla, and the birth of Maurice Druon, Manuel Mejía Vallejo and Halldór Laxness.
Although 23 April is often stated as the anniversary of the deaths of both William Shakespeare and Miguel de Cervantes, this is not strictly correct. Cervantes died on 22 April and was buried on 23 April according the Gregorian calendar; however, at this time England still used the Julian calendar. Whilst Shakespeare died on 23 April by the Julian calendar in use in his own country at the time, he actually died eleven days after Cervantes because of the discrepancy between the two date systems. The apparent correspondence of the two dates was a fortunate coincidence for UNESCO.

சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடி ...

உலகப் புத்தக நாளைக் கொண்டாடுவதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் வகையில் 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “சென்னை புத்தகச் சங்கமம்” எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

புத்தக அரங்குகள்
ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சென்னை புத்தகச் சங்கமத்தின் ‘புத்தகக் காட்சியில்’ தமிழகத்தின் புகழ்பெற்ற பதிப்பகங்கள் - விற்பனைக் கூடங்கள், பிற மாநிலங்களின் பதிப்பகங்கள் தங்களது அனைத்து வகையான புத்தகங்களையும் (தமிழ், பிற மொழி) காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக (2013 - 2016) நடைபெற்ற புத்தகக் காட்சிகளை முறையே தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் நிக்கோலய் அவிஸ்தபதோவ், ரஷ்யத் தூதர் செர்கி எல்.கோடோவ், மலேசியத் தூதர் சித்ராதேவி ராமய்யா, இந்திய அளவில் புகழ்பெற்ற வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், நேஷனல் புக் டிரஸ்ட்டின் இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர், தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்க (BAPASI) நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று துவக்கி வைத்துச் சிறப்பித்துள்ளார்கள்.
நாள்தோறும் புத்தாக்க உரை
மாலை நேரத்தில், பிரபல கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சான்றோர்களின் புத்தாக்க உரை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், கவிஞர் வாலி, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் சீனு ராமசாமி, திரைப்பட நடிகர் விவேக், Rtn.ராஜா சீனீவாசன், திரு.வி.கே.டி.பாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் நந்ததலாலா, நக்கீரன் கோபால், த.ஸ்டாலின் குணசேகரன், அருட்தந்தை ஜெகத் கஸ்பர், திரு அபிராமி ராமநாதன், பாவலர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஆசிரியர் கி.வீரமணி, ,இலக்கிய தென்றல் பழ.கருப்பையா, இலக்கிய செல்வர் குமரி அனந்தன், டாக்டர் அவ்வை நடராஜன், பேரா.சுப.வீரபாண்டியன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று புத்தாக்க உரை நிகழ்த்தியுள்ளனர்.
புத்தகர் விருது
புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களைப் பாராட்டி ஒவ்வோர் ஆண்டும் ‘புத்தகர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாளர்கள் என்.பழனி (ஈஸ்வரி வாடகை நூலகம்), வி.கிருஷ்ணமூர்த்தி (ஞானாலயா நூலகம்), நம்மாழ்வார் (எ) தாமஸ் (அரிய புத்தகங்கள் விற்பனையாளர்), கு.மகாலிங்கம் (காந்தி புத்தகம் நிலையம்), சாமி.மாணிக்கம் (தமிழ் நூற் காப்பகம்), பொள்ளாச்சி நசன், பழங்காசு ப.சீவானந்தம், தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், த.ஸ்டாலின்குணசேகரன், ‘வானதி’ ராமநாதன், மதுரை முருகேசன், ‘நூல்’ பாண்டியன், திருச்சி பட்டாபிராமன், சென்னை என்.ஆறுமுகம் உள்ளிட்ட புத்தக ஆர்வலர்களுக்கு புத்தகர் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளோம்.
புத்தகக் கொடை விழா
இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி, வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன் சேகரித்து, அவற்றைப் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இவ்வாண்டும் புத்தக வங்கி திட்டத்திற்கான அரங்கம் அமைக்கப்பட்டு, புத்தகங்களை கொடையளிப்பவர்களுக்கு 'புத்தகக் கொடைஞர்' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஆண்டுதோறும் பதிப்பாளர்களுக்கான பயிலரங்குகள், சிறுவர் - சிறுமியர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள், அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் சமூக விழிப்புணர்வு நடைப்பயணம் எனப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
உணவுத் திருவிழா
கோடை விடுமுறையைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்பெறுவதால் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குளு குளு அரங்கில்... அய்ந்தாம் ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் 2017 ஏப்ரல் 21 முதல் 25 வரை
இந்த ஆண்டு - சென்னை புத்தகச் சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு புத்தகக் காட்சி ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிய 5 நாட்கள் சென்னை - பெரியார் திடலில் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அடுத்த 4 நாட்களும் காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.
அனைத்து நூல்களும் அய்ம்பது விழுக்காடு தள்ளுபடி விற்பனை
வாசகர்களின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள், இளைஞர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவினரையும் ஈர்க்கும் வகையில் அனைத்து நூல்களும் அய்ம்பது விழுக்காடு கழிவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்கள் ஒரே இடத்தில் அய்ம்பது விழுக்காடு தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
நுழைவுக் கட்டணம் இல்லை
குளு குளு (ஏசி) அரங்கத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்குத் தூய்மையான குடிநீர் தாராளமாகக் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை கடன் அட்டையை (Credit Card), பற்று அட்டையை (Debit Card)) பயன்படுத்தி வாங்கலாம். ஐஒபி வங்கியின் நடமாடும் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவிச் சிகிச்சை மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் இல்லச் சிறார்கள் குடும்பத்துடன் வாருங்கள்! அய்ம்பது விழுக்காடு கழிவில் முற்றிலும் புதுமையான புத்தகத்தை அள்ளுங்கள்! அறிவைக் கொள்ளுங்கள்!

Sponsors

Contact Info

No:84/1 Old N0:50,Periyar Thidal,.
E.V.K Sampath Salai,
Vepery,Chennai,
Tamil Nadu,India.600007
P: 044 - 26618161/62/63